சனி, 11 டிசம்பர், 2010

தெருவிளக்குகள்


தலை குனிந்து நின்ற போதும்
தலைக்கனம் என்று கூறி,
தூவப்பட்ட கற்களால்
தூள் தூளாயிருக்கும் - நம்
வீதியோர விளக்குகள்
விடிந்து பார்க்கையிலே.

உண்மை எதுவெனில் - அவை
சாமத்து சம்பவங்களுக்கு
சாட்சியங்களாய் இருந்தவை.

2 கருத்துகள்:

  1. ஊமையான சாட்சியங்களை வைத்து என்னதான் செய்வது :
    தெரு விளக்குகளின் திருவாயை திறக்க சொல்லுங்க .
    துபா its reALLY NICE .

    பதிலளிநீக்கு
  2. beautiful ....சாட்சிகள் மீட்சி ஆக பிரார்த்திக்கிறேன்..


    பதிலளிநீக்கு